Skip to main content

''நானும் விவசாயி நானும் விவசாயி என எடப்பாடி பழனிச்சாமி சொல்லிக்கொள்கிறாரே தவிர...''- முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு!    

Published on 27/09/2020 | Edited on 27/09/2020
dmk stalin speech

 

கரூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் அக்கட்சியின் தலைவர் திமுக ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
 

அப்பொழுது பேசுகையில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஐந்து மாதங்களாக வலியுறுத்தியதை அரசு செய்யவில்லை. எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் பின்வாங்க போவதில்லை. நானும் விவசாயி நானும் விவசாயி என எடப்பாடி பழனிச்சாமி சொல்லிக்கொள்கிறாரே தவிர விவசாயியாக நடந்துகொள்ளவில்லை. விவசாயிகளுக்கு எதிரான விரோத சட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார். இதைவிட விவசாயிகளுக்கு துரோகம் இருக்க முடியுமா? பச்சைத் துண்டு போர்த்தி நடித்த அவருடைய பச்சை துரோகம் இது. கொடிய ஊழல் வைரஸ் கூட்டத்தை இந்த கோட்டையில் இருந்து விரட்ட வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்