Skip to main content

தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை! (படங்கள்)

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று (28/05/2022) காலை 10.30 மணிக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மற்றும் மாவட்டச் செயலாளர், மாவட்டப் பொறுப்பாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

 

இந்த ஆலோசனை கூட்டத்தில், வரும் ஜூன் 3- ஆம் தேதி அன்று முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது, தி.மு.க. உட்கட்சித் தேர்தல், அடுத்த மாதம் கூட உள்ள பொதுக்குழு பற்றியும், முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்