Skip to main content

பாஜகவை அகற்றும் ஒருங்கிணைப்பிற்கு திமுக முழு ஆதரவு!! -ஸ்டாலின்

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

பாஜகவிற்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு அண்மையில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

 

அதன் அடிப்படையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்துள்ள சந்திரபாபு நாயுடு ஆழ்வார்பேட்டையிலுள்ள ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின் பொழுது திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் பல திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

இந்த சந்திப்பிற்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

 

dmk

 

அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,

மாநில உரிமைகள் மோடியின் ஆட்சியில் முழுமையாக பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்த அனைத்து மாநிலங்களில் இருக்கக்கூடிய தலைவர்கள் ஒன்று சேர்ந்து, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய பாஜக ஆட்சியை அகற்ற ஒன்றிணைய வேண்டும் என்று நான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றமாக இருந்தாலும் சரி, சிபிஐ ஆக இருந்தாலும் சரி சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்படக் கூடிய அந்த அமைப்புகளை கூட மிரட்டுகிற, அச்சுறுத்துகிற வகையில் பிஜேபி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இதைத்தடுக்க வேண்டும். உடனடியாக பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் இருக்கக்கூடிய தலைவர்களும்  முதலமைச்சர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த முயற்சிக்கு திமுக ஆதரவு வேண்டுமென அவர் நேரடியாக என்னை சந்தித்துள்ளார். இந்த முயற்சிக்கு திமுக முழுமையாக ஆதரவு கொடுக்கும் என நம்பிக்கை அளித்திருக்கிறேன் என கூறினார்.

 

அதனை எடுத்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,

 தமிழகத்தில் ஆட்சியே ரிமோட் கண்ட்ரோலில் தான் செயல்படுகிறது. மாநிலக் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். இங்கு ஊடக சுதந்திரமும் பறிக்கப்பட்டு ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் கொடுக்கப்படுகிறது. பாஜகவிற்கு எதிர்க் கட்சி காங்கிரஸ்தான் எனக் கூறினார் எனக் கூறினார்.

சார்ந்த செய்திகள்