Skip to main content

மக்களவை தேர்தலில் மூன்று பெண்களுக்கு மட்டும் வாய்ப்பளித்த திமுக , அதிமுக கட்சிகள்!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 37 மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற்றது. இந்த  தொகுதிகளில்

 திருப்பூர் மக்களவை தொகுதி உறுப்பினர் : வி. சத்யபாமா  , 
திருவண்ணாமலை மக்களவை தொகுதி உறுப்பினர் : ஆர். வனரோஜா ,
தென்காசி மக்களவை தொகுதி உறுப்பினர் : எம்.  வசந்தி 
காஞ்சிபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர்  : கே. மரகதம்

உள்ளிட்ட நான்கு பெண்கள் அதிமுக மக்களவை உறுப்பினர்களாக தற்போது உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

kanimozhi


2019 ஆம் ஆண்டுக்கான  மக்களவை தேர்தல் தேதியை சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் 17.03.2019 அன்று திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர்.

 

இதில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தலா 20 இடங்களில் போட்டியிடுகிறது. அதனை தொடர்ந்து வேட்பாளர்கள்  விவரங்களை நாம் ஆராய்ந்ததில் திமுக சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழிக்கும், தென் சென்னை மக்களவை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஒரே பெண் வேட்பாளர் மரகதம் குமரவேல். காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மீண்டும் அவருக்கு போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. 
 

thamilachi thangapandiyanmaragatham



கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவில் 4 பெண்கள் போட்டியிட ஜெயலலிதா  வாய்ப்பளித்தார். 
கலைஞர் மற்றும் ஜெயலலிதா உட்பட இரு தலைவர்கள் இருந்திருந்தால் வேட்பாளர்கள் தேர்வு எப்படி இருந்திருக்கும்? தற்போது உள்ள அதிமுக மற்றும் திமுக  தலைவர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்று தமிழக மக்கள் உற்று நோக்குக்கின்றனர். மேலும் இரு கட்சிகளும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை. அதேபோல் பெண்களுக்கு மக்களவை தொகுதியில் 10% இட ஒதுக்கீடு கூட  தமிழக அரசியல் கட்சிகள் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பி.சந்தோஷ் , சேலம்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.