Skip to main content

கிராமசபை கூட்டம் போல் நடந்த திமுகவின் பூத் கமிட்டி கூட்டம்

Published on 10/12/2018 | Edited on 10/12/2018

 

b

 

பாராளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி அரசியல் கட்சிகள் எல்லாம் அங்கங்கே பூத் கமிட்டி அமைத்து  பணியாற்றி  வருகிறார்கள்.  அதுபோல் திமுகவும் தமிழகம் முழுவதும் பாராளுமன்றத்திற்கான  பொறுப்பாளர்களை நியமித்து  அந்த பொறுப்பாளர்கள் மாவட்டம் தோறும் சென்று அந்தந்த பகுதியில் உள்ள நகரம் ஒன்றியங்களில் பூத் கமிட்டி அமைத்து வருகிறார்கள்.  அதுபோலதான் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக சாமிநாதனை தலைவர் ஸ்டாலின் நியமித்ததின் பேரில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிழக்கு மேற்கு மாவட்டங்களில் பூத் கமிட்டிகள் அமைத்து தேர்தல் பணிகளுக்காக கட்சியினரை உசுப்பி விட்டு வருகிறார்.

 

d


இந்த நிலையில் தான் திடீரென தலைவர் ஸ்டாலின் பூத் கமிட்டியை கிராமசபை கூட்டம் போல் போட்டு அதில் மக்களையும் வரவழைத்து அவர்களுடைய குறைகளையும்,  கோரிக்கைகளையும் கேட்டு பூத் கமிட்டி மையங்கள் அமையுங்கள் என வலியுறுத்தி இருக்கிறார்.    அதன் அடிப்படையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள  வத்தலகுண்டு ஒன்றிய பகுதியில் இருக்கக்கூடிய காமாட்சி புரத்தில் பாராளுமன்ற பொறுப்பாளர் சாமிநாதன் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐபி செந்தில்குமார் தலைமையில் திமுகவின் பூத் கமிட்டி கூட்டம்  கிராமசபை கூட்டம் போல்  நடந்தது. இதில் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டு கள்ள ஓட்டு மற்றும் போலி வாக்காளர்கள் தடுப்பதை பற்றி பேசினார்கள். அதோடு ஒரு பூத் கமிட்டிக்கு 5 பெண்கள் உள்பட 21 பேர் என   பூத் கமிட்டியை நியமித்து கட்சியினரை தேர்தல் களத்தில் இறக்கி விட்டு இருக்கிறார்.  இதுபோல் ஏழூ  சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரு ஊருக்கு ஒன்று, இரண்டு என பூத்துகள் உள்ள ஊர்களில் சமூதாய கூடம், திருமணமண்டபம் மற்றும் மரத்தடி, சாவடிகளில் பூத்கமிட்டி  கூட்டத்தை கிராமசபை கூட்டம் போல் போட்டு கட்சிக்காரர்களை தேர்தல் களத்தில் இறக்கிவருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்