Skip to main content

தீபாவளி கொண்டாட்டம்; 163 வழக்குகள்... 280 தீ விபத்துகள்...

Published on 25/10/2022 | Edited on 25/10/2022

 

Diwali celebration; 163 case.. 280 fire accident!

 

தீபாவளி பண்டிகை நாள் வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு இருந்தாலும் காலை முதல் இரவு வரை மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். சென்னையில் கரும்புகைமண்டலம் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்தது.

 

சென்னையில் பல்வேறு இடங்களில் காற்று மாசு 200 புள்ளிகளைத் தொட்டது. பெருங்குடியில் 252, ராயபுரத்தில் 205, மணலியில் 201, ஆலந்தூர் பகுதியில் 191 எனக் காற்று மாசு அளவிடப்பட்டுள்ளது. 

 

அதேபோல், சென்னையில் நேற்று நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ள நிலையில், உயிர் தேசம் ஏதும் ஏற்படவில்லை எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்