Skip to main content

இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும்: பா.ரஞ்சித்

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

கர்நாடகா பகுதிகளில் 'நீலம் பண்பாட்டு மையம்' ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி, சட்ட ஆலோசனை மையம், விளையாட்டு மற்றும் கலைத்திறமைகள் பயிற்சி பள்ளிகள், அம்பேத்கர் நூலகங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்குவோர் ஆலோசனை மையம் போன்றவற்றை இயக்குநர் பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்.

 

director-pa-ranjith-Speech

 

 

அப்போது பேசிய பா. ரஞ்சித், "இந்தியாவில் மதத்தாலும், சாதியாலும் மக்களை பிரித்தாளுகிற சூழ்ச்சியானது நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே போகிறது.  இந்த சூழலில் நமக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடியது அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் தான். அவரை பின்பற்றினால் மட்டுமே நமக்கான விடுதலை சாத்தியம். நமக்குள் இருக்கிற முரண்களை களைந்துவிட்டு, நாம் எல்லோரும் ஓரணியில் திரண்டாக வேண்டிய மிகமுக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். எனவேதான் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் இவற்றையெல்லாம் செய்கிறோம். விரைவில் தமிழகம் முழுவதும் இதுபோல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தீபக் ராஜா கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது” - ஹிப் ஹாப் ஆதி

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Hip Hop Adhi said I know nothing about Deepak Raja case

திருச்சி மாரிஸ் எல்.ஏ.  திரையரங்கில் நேற்று(26.5.2024) ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த பி.டி. சார் திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்படத்தின் இடைவேளையில் தோன்றிய படத்தின் கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி, ரசிகர்களிடம் இந்த திரைப்படத்தை வெற்றி அடையச் செய்ததற்கு தனது நன்றியை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். திரையரங்கில் ஹிப் ஹாப் பாடலை ஆதி பாட, ரசிகர்களும் அவருடன் இணைந்து பாடினர்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஹிப் ஹாப் ஆதி, “படத்தை வெற்றி அடையச் செய்த அனைவருக்கும் நன்றி. இரவு காட்சி திருச்சியில் 800 இருக்கைகளுக்கு மேல் கொண்ட இந்த திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் கூட்டமாக வந்து படத்தை பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இங்கு வந்தபோது ரசிகர்கள் எங்களை வரவேற்ற விதம் எங்களது களைப்பை போக்கிவிட்டது. இத்தகைய ரசிகர்கள் எனக்கு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. நான் கொடுத்து வைத்தவன். சில யூடியூப்களில் இத்திரைப்படத்தை பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருவதை பற்றி எனக்கு கவலை இல்லை. அது அவர்களின் கருத்து. திரையரங்குகளில் இந்த படத்தின்  வெற்றியை நீங்களே பார்க்கின்றீர்கள். அப்படி எதுவும் குறை இருந்தால் அதை அடுத்தடுத்த படங்களில் நிவர்த்தி செய்வேன். தொடர்ந்து நல்ல படைப்புகளை தருவேன் நடிகர்,  இசையமைப்பாளர், ஹிப் ஹாப் பாடகர் என என்னை அனைத்து பரிமாணங்களிலும் பார்க்கலாம். நான் கலைஞனாக சமுதாய கருத்துள்ள படைப்புகளை கொடுக்கவே விருப்பப்படுவேன்” என்றார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த ஆதியிடம், நெல்லையில் தீபக் ராஜா கொல்லப்பட்டதற்கு பா.ரஞ்சித்தின் கருத்து குறித்து நீங்கள் என்னை நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பபட்டது. அதற்கு,  ஆணவக் கொலையா? என்று கேட்ட ஆதி, எனக்கு இந்த கொலையைப் பற்றி எதுவும் தெரியாது; முதலில் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்கிறேன். தெரியாததைப் பற்றி எப்படி கருத்துசொல்ல முடியும். ஆணவக் கொலைக்கு என்றைக்கும் நான் எதிரானவன்; நான் மட்டுமல்ல இங்க இருக்க எல்லாரும் ஆணவக் கொலைக்கு எதிரானவர்கள்தான் என பதிலளித்தார்.

மேலும், “ஆணவக் கொலைக்கு எதிராக நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஹிப் ஹாப் பாடல் எழுதியுள்ளேன்” என கூறி அப்பாடலில் சில வரிகளை பாடிக் காட்டினார்.

Next Story

“நிலையற்ற வாழ்வில் அவரது மறைவு பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது” - சரத்குமார் இரங்கல்

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
sarathkumar condolence message for director surya prakash passed away

ராஜ்கிரண் மற்றும் வனிதா விஜயகுமார் நடிப்பில் 1996ஆம் அண்டு வெளியான மாணிக்கம் படத்தை இயக்கியவர் சூர்யபிரகாஷ். இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து சரத்குமாரை வைத்து மாயி மற்றும் திவான் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஜீவன் நடித்த அதிபர் மற்றும் தெலுங்கில் ராஜசேகர் நடித்த பாரதசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, வருசநாடு என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வந்தார். இந்த படம் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை இயக்குநர் சூர்யபிரகாஷ் மறைந்துள்ளார். மாரடைப்பு காரணமாக மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது மறைவுற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சரத்குமார், “எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.