ஐபிஎல்க்கு எதிரான போராட்டத்தில் காவலர் செந்தில்குமார் தாக்கப்பட்டதில் இயக்குனர் கவுதமன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. காவலர் தாக்கப்பட்ட வழக்கில் இயக்குனர் கவுதமன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை நீதிமன்றம்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் நடந்து வந்தன. அப்பொழுது சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடத்துவதை எதிர்த்து ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை அண்ணா சாலை, சேப்பாக்கம் மைதானம் பகுதிகளில் பெரும் திரளாய் இயக்கங்களை சேர்ந்தவர்களும் மக்களும் கூடிப் போராடினர். பாரதிராஜா, அமீர், ராம், வெற்றிமாறன் உள்ளிட்ட பல இயக்குனர்களுடன் கௌதமனும் இதில் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் பல பிரச்சனைகளில் போராட்டங்களை ஒருங்கிணைத்தும் பங்கேற்றும் வரும் நிலையில் கடந்த 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். நேற்று இவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.