Skip to main content

கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜினாமா...!

Published on 08/03/2022 | Edited on 08/03/2022

 

 Deputy Chairman of Keeramangalam Municipality resigns ...!

 

மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். இதில் பல்வேறு இடங்களில் திமுக- அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

சில இடங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே திமுக வேட்பாளர்கள் வென்றனர். இதனைத் தொடர்ந்து தலைமையின் அறிவிப்புக்கு மாறாக செயல்படுவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் சில இடங்களில் குற்றச்சாட்டை வைத்தன. "கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து சந்திக்க வேண்டும்" என அதிரடி அறிக்கை விட்டிருந்தார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

 

இன்று காலை நெல்லிக்குப்பம் நகர் மன்ற துணைத்தலைவர் பதவியை திமுகவின் ஜெயப்பிரபா ராஜினாமா செய்திருந்த நிலையில், புதுக்கோட்டை கீரமங்கலம் பேரூராட்சி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முத்தமிழ் செல்வியை எதிர்த்து போட்டியிட்டு திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வென்றிருந்தார். இந்நிலையில் திமுக தலைவரின் அறிக்கையை அடுத்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான செந்தில்குமாரிடம் தமிழ்ச்செல்வன் கொடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அடுத்தகட்டத்திற்கு தயாராகும் பொற்பனைக்கோட்டை; துவக்கி வைக்க இருக்கும் முதல்வர் 

Published on 17/06/2024 | Edited on 17/06/2024

 

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டை களில் சற்றும் சிதிலமடையாத கோட்டை, கொத்தளம், அகலியுடன் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. கோட்டையின் நுழைவாயில்களில் காவல் தெய்வமாக முனீஸ்வரன், காளியம்மன் போன்ற காவல் தெய்வங்கள் கோயில்களாக கட்டி வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோட்டைக்குள் உள்ள நீர்வாவிக் குளக்கரையில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லில் தமிழி எழுத்துகளில் உள்ள கல்வெட்டு ஒன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கோட்டைப் பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்தது. அடுத்தகட்டமாக தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் தங்கத்துரையை இயக்குநராகக் கொண்டு அவரது ஆய்வுக் குழுவினர் கடந்த ஆண்டு அகழாய்வு செய்தனர்.

அகழாய்வில் சங்ககால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், மணிகள், வட்டசில், தங்க ஆபரணம், போன்ற ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வட்ட வடிவில் சுடு செங்கல் கட்டுமானம் நீர்வழித்தடம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்தகட்ட அகழாய்விற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் (18/06/2024) செவ்வாய்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத்திடலில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுக் குழுவினர் ஆகியோர்  கலந்து கொள்கின்றனர்.

இந்த அகழாய்வில் சங்ககால மக்கள் வாழ்ந்த வரலாறுகள் சான்றுகளாக வெளிப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.

Next Story

லண்டன் சென்று வந்த மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
chief minister discussion with students who visited London

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் லண்டனுக்குச் சென்று பயிற்சி பெற்றுத் திரும்பிய மாணவர்கள் இன்று தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பள்ளிக் கல்வி முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பைத் தொடர்வதற்கான 'நான் முதல்வன்' திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நான்  முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் 25 பேர் கடந்த வாரம் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக லண்டன் சென்றிருந்தனர். இரண்டு வார பயிற்சிக்குப் பின் சென்னை திரும்பி நிலையில் இன்று பிற்பகல் ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் மாணவ  மாணவியர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார்.