Skip to main content

காதலிக்க மறுத்ததால்  இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!

Published on 11/11/2018 | Edited on 11/11/2018
p

   

 ஒரு தலைக்காதல் விபரீதத்தால் இளம்பெண் ஒருவர் அரிவாளால் வெட்டுப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.  நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது ராமகிருஷ்ணாபுரம். இந்த கிராமத்தை சேர்ந்த குமார் என்பவருடைய மகள் பிரியா. இவரை அவரது உறவுக்காரர் இசக்கியப்பன் மகன் இசக்கிமுத்து ஒருதலையாக காதலித்துள்ளார். பிரியா காதலிக்க மறுத்து வந்ததாக சொல்லப்படுகிறது.

 

e

 

    இந்நிலையில், நேற்று அதிகாலை பிரியாவின் வீட்டிற்குள் புகுந்த இசக்கிமுத்து, பிரியாவின் கழுத்தில் அரிவாளால் வெட்டி உள்ளார். அப்போது, தடுக்க முற்பட்ட பிரியாவின் தம்பி இசக்கி என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இசக்கிமுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பலத்த காயமடைந்த பிரியாவும், இசக்கியும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

      கடந்த ஜனவரி மாதமும் இதே போல், பிரியாவை பிளேடால் தாக்கி இருக்கிறார் இசக்கிமுத்து. அப்போது அவரது பெற்றோர் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீஸார் மெத்தனமாக இருந்ததே, மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்