Skip to main content

பண்ருட்டியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டம்.

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 60- க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்திட, மலற்றாற்றிணை தூர்வார ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி உடனே பணியை துவக்கவேண்டும்.  விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகில் தடுப்பணை மட்டும் ஷட்டர் அமைத்து தண்ணீரை திருப்பி விட வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பை அகற்றி ஆற்றில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை மலற்றாற்றில்  திருப்பி விடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டை நாமம் போட்டுக்கொண்டு விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க பிரதிநிதிகள் நூதன போராட்டம் நடத்தினார்கள்.

 

cuddalore panruti farmers strike based on rain water harvesting lake cleaning


இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் காந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதவன் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை, முன்னாள் விவசாய சங்க ஒன்றிய செயலாளர்கள் லோகநாதன், தென்னரசு உள்ளிட்டோர் கலந்து விவசாயிகளின் கோரிக்கை குறித்து கண்டன உரையாற்றினார்கள். பின்னர் மேற்கொண்ட கோரிக்கைகள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுகொடுத்தனர்.


 

சார்ந்த செய்திகள்