Skip to main content

அடாவடி ஆய்வாளர் ஆயுதபடைக்கு மாற்றம்!

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கஞ்சிதொட்டி முனை பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன் சிதம்பரம் காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் வேல்முருகன், காவலர் மரியசார்லஸ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது புவனகிரியில் இருந்து ஒரு தம்பதியினர் தனது இரு குழந்தைகளை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு தீபாவளி பண்டிக்கைக்கு பொருட்கள் வாங்க சிதம்பரத்திற்கு வந்துள்ளனர்.

 

cuddalore incident.... Transition to Inspector Armed Forces

 

அப்போது தம்பதியினரை தடுத்து ஆய்வு செய்த காவலர்களிடம் ஹெல்மெட், வண்டிக்கு உரிய ஆவண நகலை காட்டியுள்ளனர். அப்போது காவலர்கள் ஒரிஜினல் வேண்டும் என்றும் குழந்தைகளை அழைத்துவர அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் தம்பதியினருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவரது மனைவி குழந்தைகளை வைத்துக்கொண்டு இந்த ஒரு தடவை மன்னித்துவிடுங்கள் என்று கூறி கெஞ்சியதை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவு செய்தனர். இது வைரலாகியது.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிதம்பரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு சமூக சீர்கேடான சம்பவங்கள் காவல்துறையினரின் அனுமதியோடு நடைபெறுகிறது. இதனை தடுக்கமுடியாத காவல்துறை மனைவி குழந்தைகளுடன் வருபவரை மடக்கி அசிங்கபடுத்துவது சரியா? அதேநேரத்தில் சிலரிடம் ரூ100 வாங்கிவிட்டு வாய்பேசாமல் அனுப்புவது யாருக்கும் தெரியாதா? என கேட்டு பதிவு செய்து வருகிறார்கள்.

இதற்கு காவல்துறையில் உள்ளவர்கள் சிலர் சட்டம் அதைதான் சொல்கிறது. ஆனால் அவர் சொன்னவிதம்தான்  சரியில்லை என்கின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடம் மட்டுமின்றி காவல்துறையின் உயர் அதிகாரிகள்  மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அபிநவ்ஸ்ரீ தணிக்கையின் போது ஒழுங்கினமாக நடந்துகொண்டதிற்கு இவர்கள் இருவரையும் ஆயுதபடைக்கு மாற்றியுள்ளார். இதனை அனைவரும் வரவேற்று காவலர்களுக்கு பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று புரிதலை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்