Skip to main content

என்.எல்.சி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிதியுதவியை அமைச்சர் சம்பத் வழங்கினார்! 

Published on 05/07/2020 | Edited on 05/07/2020

 

cuddalore district neyveli nlc employees incident tn govt relief fund

கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 01- ஆம் தேதி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உட்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளிகளுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சமும், லேசான காயமடைந்த தொழிலாளிகளுக்கு ரூபாய் 50 ஆயிரமும் வழங்கப்படும் அறிவித்திருந்தார். 

cuddalore district neyveli nlc employees incident tn govt relief fund

அதன்படி, தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி ஆகியோர் என்.எல்.சி. நிறுவன விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 3 லட்சத்துக்கான காசோலையை உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி ஆறுதல் கூறினர். இந்த நிகழ்ச்சியில் விருத்தாசலம் சார்- ஆட்சியர் பிரவீன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்