Skip to main content

பொன்.ராதாகிருஷ்ணனா? பொய்.ராதாகிருஷ்ணனா? - கம்யூனிஸ்ட் தலைவர் கிண்டல்

Published on 22/06/2018 | Edited on 22/06/2018
பொ

 

கோவை ஜீவா இல்லத்தில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். கோவை மாநகராட்சிக்கு குடிநீர் விநியோக ஒப்பந்தத்தை தனியார் (சியஸ்) நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதை சிபிஐ வண்மையாக கண்டிப்பதாகவும், உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகின்ற 29ம் தேதி மாநில துணை செயலாளர் சுப்பராயன் தலைமையில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தார்.

சேலம் - சென்னை பசுமை வழி சாலை திட்டம் தேவையற்றது எனவும், வளர்ச்சி என தமிழக அரசு கூறுவது ஏற்படையதல்ல என்றும் திட்டத்தை நிறைவேற்றியே தீர்வோம் என முதல்வர் அடம்பிடிப்பதாகவும் அவர் குற்றச்சாட்டினார். பியூஸ், வளர்மிதி உள்ளிட்டோரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், கருத்து கூறினால் சமூக விரோதிகள் என கூறினால் நாங்களும் சமூக விரோதிகளே என முத்தரசன் கூறினார்.

 

 


மாநில அரசின் எட்டு வழி சாலையை கண்டித்து ஜுலை 4ம் தேதி சேலத்தில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும்,  தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பி வரும் நலையில் அரசு கைது நடவடிக்கை மூலம் அரசு பதற்றத்தை உருவாக்கி வருகிறது என சுட்டிக் காட்டினார். ஆளுநர் மூலமாக மத்திய அரசு தமிழகத்தில் ஆட்சி செய்து வருவதாக கூறிய அவர், பல்வேறு அடக்குமுறைகள் மத்திய அரசின் உத்தரவின் பேரில்  மாநில அரசு செயல்படுத்தி வருகிறது என புகார் கூறினார்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு ஆதரவாகவே மாநில அரசு செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாக தெரிவதாகவும்,  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதுவும் மத்திய அரசு கையில் உள்ளது என கூறினார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் இன்னும் பதிவி விலகவில்லை என கேள்வி எழுப்பிய அவர்,  ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக கடி வால் இல்லாத குதிரை போன்று ஆகிவிட்டதாக தெரிவித்தார்.

 

 


அமைச்சர்கள் தங்களது வாய் வந்ததை அனைத்தும் பேசி வருகின்றனர் எனவும்
காவிரி வேளாண்மை வாரியத்தை அமைத்தே விட்டதாக சாதனை கூட்டத்தை அதிமுகவினர் நடத்தி வருவது கேலி கூத்து என கூறினார். மேலும்,  தமிழகத்தில் நக்சலைட், மாவோயிஸ்ட் இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கடி கூறி வருகின்றார் எனவும் உளவுத்துறை பார்க்கும் வேலையை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்க்கின்றார் என புகார் தெரிவித்தார்.

பொன்.ராதா கிருஷ்ணனா? பொய்.ராதா கிருஷ்ணனா? என்ற கேள்வி மக்களிடம் இருக்கின்றது எனவும்,  போகின்ற போக்கில் நக்சல், மாவோயிஸ்ட் என்று அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லிவிட்டு போக கூடாது எனவும் யார் அவர்கள் என்பது குறித்த பட்டியலை பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவிக்க வேண்டும்’’ எனவும் வலியுறுத்தினார்.



 

சார்ந்த செய்திகள்