Skip to main content

கரோனா: முதல்வர் நிதிக்கு திமுக ரூபாய் 1 கோடி நிதியுதவி!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

கரோனா தடுப்பு பணிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், நடிகர்கள், நடிகைகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்டோரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும், பிரதமரின் பொது நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றன. 
 

CORONA VIRUS DMK FUND RS 1 CRORES


கரோனாவைத்  தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூபாய் 1 கோடி நிதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் திமுக அறக்கட்டளை சார்பில் கரோனா தடுப்பு, நிவாரண பணிக்கு ஆன்லைனில் நிதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதனிடையே கரோனா தடுப்பு பணிகளுக்கு திமுகவின் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி ரூபாய் 1 கோடி ஒதுக்கினார். 

 

சார்ந்த செய்திகள்