Skip to main content

தொடரும் ஏடிஎம் கார்டு மோசடி...தேடுதல் வேட்டையில் காவல்துறையினர்!

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

Continuing ATM card fraud, Police on searching

 

ஏடிஎம் மையங்களில் சில மர்ம நபர்கள், படிக்க தெரியாத ஏழை எளிய மக்களின் ஏடிஎம் கார்டில் மோசடி செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே உள்ளன. அந்த வரிசையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் 56 வயது சாந்தி. அவரது கணவர் கிருஷ்ணன் ஆகிய இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் நேரு வீதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

 

அந்த இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. பணம் எடுப்பதற்கு மீண்டும் முயற்சி செய்து தடுமாறிக் கொண்டிருந்தபோது ஒரு மர்ம நபர் அவர்களுக்கு பணம் எடுத்து தருவதாக கூறியுள்ளார். அவர்களது ஏடிஎம் கார்டை வாங்கி பணம் எடுப்பதற்கு முயற்சி செய்வது போல் பாவலா காட்டியுள்ளார். பணம் வரவில்லை என்று கூறி அந்த தம்பதிகள் ஏடிஎம் கார்டை அவர்களிடம் கொடுக்கும் போது கார்டை மாற்றி கொடுத்து விட்டு நைஸாக சென்றுவிட்டார். தம்பதிகள் இருவரும் வங்கிக்கு நேரடியாகச் சென்று எழுதிக் கொடுத்து பணம் எடுக்க சென்றனர்.

 

ஆனால் அவர்களது வங்கி கணக்கில் இருந்த பணம் முற்றிலும் ஏடிஎம் கார்டு மூலம் எடுக்கப்பட்டு விட்டதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வங்கிக் கணக்கில் இருந்து 19 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த மர்ம ஆசாமிகள் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இருவரும் திண்டிவனம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் மூலம் பணத்தை அபகரித்த  மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்