Skip to main content

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார்... குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

complaint against Manikandan ... Charge sheet filed!

 

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

முன்னாள் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவந்தனர். இந்தப் புகார் தொடர்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

அதன்பின் மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலை 7ஆம் தேதி நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார்  351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். இந்தப் புகாரில் ஏற்கனவே மணிகண்டன் மீது 2 வழக்குகள் இருந்த நிலையில், 342, 352 ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்த்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்