Skip to main content

அப்பாவின் வங்கி கடனுக்காக நகையை திருடிய கல்லூரி மாணவன்!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020

 

College student steals jewelry for dad's bank loan!

 

திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம், இவர் ஜவுளி தொழில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருபவர். இவர் உறவினர் வீட்டு திருமணத்திற்காக சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்தே கிடந்தது, பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை, 5 இலட்சம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

 

உடனே ராமலிங்கம் நடந்த சம்பவம் குறித்து  கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸ் விசாரணையில் ராமலிங்கத்தின் மகள் கல்லூரி படிக்கிறார். அவர்  கல்லூரியில் படிக்கும் நண்பன்  ரகு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வது தெரியவந்ததும் உடனே சந்தேகத்தின் பெயரில் குபேந்திரனை பிடித்து விசாரணை நடத்தினார்.

 

விசாரணையில் ரகு, என் தோழியுடன் அவருடைய வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவேன். எனது  தந்தை வங்கி ஒன்றில் கடன் வாங்கியிருந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து  விட்டார்.  இதன் பிறகு வங்கி அதிகாரிகள் அந்த கடனை கேட்டு என்னை டார்ச்சர் செய்ய  ஆரம்பித்தனர். இதனால் எனக்கு மன உளைச்சல் அதிகமானது. எனக்கு வேறு வழி  தெரியவில்லை. என் தோழியின் அப்பா வீட்டின் சாவியை எங்கு வைப்பார் என்று எனக்கு  தெரியும். அதனால் அவர் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து நகையையும், பணத்தையும் திருடினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். 

 

திருடிய பணத்தையும் நகையும் திரும்ப போலீசிடம் ஒப்படைத்தார். அந்த நகைகயை பறிமுதல் செய்தனர். ரகு திருச்சி கல்லூரி ஒன்றில் பிபிஏ 3ம் ஆண்டு படிக்கும் 20 வயது இளைஞர் என்பது  குறிப்பிடதக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்