Skip to main content

நாமக்கல்: கொப்பரை விலை சரிந்தது!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெங்கமேட்டில் வேளாண் கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன்படி, வியாழக்கிழமை (பிப். 20) கொப்பரை ஏலம் நடந்தது.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் கொப்பரைகளை ஏலத்திற்குக் கொண்டு வந்திருந்தனர். உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

 

coconut price decrease

 

இந்த வாரம் நடந்த ஏலத்தில், மொத்தம் 15870 கிலோ கொப்பரை ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்டது. ஒரு கிலோ கொப்பரை அதிகபட்சமாக 100.55 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 91.69 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. ஒட்டுமொத்தமாக 13.90 லட்சம் ரூபாய்க்கு கொப்பரைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த வாரம் நடந்த ஏலத்தில் கொப்பரை விலை 97.60 முதல் 103.38 ரூபாய் வரை விற்பனை ஆன நிலையில், நடப்பு வாரத்தில் கிலோவுக்கு 3 ரூபாய் வரை குறைந்துள்ளது. அதேபோல் கொப்பரை வரத்தும் 3 ஆயிரம் கிலோ வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்