Skip to main content

''சித்ரா நிலை எனக்கும் வரக்கூடாது'' - சின்னத்திரை நடிகை கமிஷ்னரிடம் புகார்!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

'' Chitra situation should not come to me '' -  actress complains to Commissioner

 

சென்னை மணலி வலிஜாபாளையத்தைச் சேர்ந்த சின்னத்திரை நடிகையான ஜெனிஃபர், 'செம்பருத்தி' தொடரின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'வானத்தைப் போல' தொடரில் நடித்து வருகிறார். சின்னத்திரை நடிகை ஜெனிஃபருக்கு இரண்டு ஆண்டுக்கு முன் சரவணன் என்பவருடன் திருமணம் நடந்தது. பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக, நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்துவருகிறது.

 

இந்நிலையில், துணை இயக்குனரான நவீன்குமாருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில், இரு வீட்டாரும் ஜெனிஃபரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அது முடிந்த பின் திருமணம் செய்வதாக முடிவெடுத்தனர்.

 

கடந்த மாதம் சின்னத்திரை நடிகை ஜெனிஃபர் மற்றும் நவீன்குமார் பல இடங்களில் காதலர்களாகச் சுற்றி வந்தனர். கடந்த மாதம் பாண்டிச்சேரி சென்றிருந்த போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெனிஃபர் நவீன்குமாரிடம் சரியாகப் பேசாமல் அவரை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமார் வளசரவாக்கத்தில் படப்பிடிப்புக் குழுவில் இருந்த ஜெனிஃபரை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு, போரூர் வழியாக கூடுவாஞ்சேரி, வண்டலூர் வழியாக சிங்கப்பெருமாள் கோவில் வரை அழைத்துச் சென்று, ஜெனிஃபரை தாக்கி, நிர்வாணப்படுத்தி, புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்து, இந்த விசயத்தை வெளியே சொன்னால் சின்னத்திரை நடிகை சித்ராவின் கதிதான் உனக்கும் நடக்கும் என்று மிரட்டியுள்ளார்.

 

'' Chitra situation should not come to me '' -  actress complains to Commissioner

 

இந்நிலையில் சின்னத்திரை நடிகை ஜெனிஃபரிடம் நவீன்குமார் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். நவீன்குமாரை ஜெனிஃபர் தவிர்த்து வந்த நிலையில், நவீன்குமார் ரவுடிகளை அழைத்துவந்து ஜெனிஃபர் குடும்பத்தாரையும், ஜெனிஃபரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கியுள்ளார்.

 

இதில், ஜெனிஃபர் மற்றும் அவரது தாயார், தந்தை, தங்கை, சகோதரர் ஆகியோரை தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து, ஜெனிஃபர் குடும்பத்தார் கேட்டபோது, நவீன்குமாரின் தந்தை உதயகுமார் காவல்துறையில் உயர் அதிகாரியாக இருப்பதால் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டி வந்ததாகத் தெரிய வருகிறது.

 

இதனால், சின்னத்திரை நடிகை ஜெனிஃபர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மகேஷ்குமார் அகர்வாலை நேரில் சந்தித்து, நவீன்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சின்னத்திரை நடிகை ஜெனிஃபர், ''சித்ரா நிலைமை எனக்கும் வரக்கூடாது என்பதற்காகத்தான் இன்று புகார் கொடுத்துள்ளேன். ஒரு நிர்பயா கேஸுக்காக இவ்வளவு தூரம் போராடும் நீங்கள் ஏன் இதற்கு நிற்க மாட்டேங்குறீங்க. என்னிடம் இரண்டு லட்சம் வாங்கியிருப்பார்கள். எனக்கு நீதி வேண்டும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்