Skip to main content

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

Chief Minister's Foreign Travel: Agreement with any companies

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான், சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில் எந்தெந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

பன்னாட்டு தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் மாநில அரசால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு இந்த மாநாடு நடைபெற இருக்கின்ற சூழலில் தமிழக முதல்வர் ஜப்பான், சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்வது குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. 8 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் எந்தெந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

ஜப்பானின் டோக்கியோ நகரில் அதிக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாகவும் அதேபோல் கீட்டோ நகரிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டோக்கியோ நகரில் 200-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் பங்கேற்க உள்ளார். அதேபோல் கயோசூடோ மற்றும் ஜெட்ரோ ஆகிய ஜப்பான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .ஜப்பான் தொழில்துறை அமைச்சரை சந்தித்து தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொள்வார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்