Skip to main content

முதல்வர்-திமுக முன்னாள் அமைச்சர் திடீர் சந்திப்பு !

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

நேற்று காலை முதல்வரின் வீட்டிற்கு உயர்கல்விதுறைத் அமைச்சர் அன்பழகனும், திமுக முன்னாள் அமைச்சருமான முல்லைவேந்தனும் சந்தித்து பேசியுள்ளார்.

தருமபுரி மாவட்டம் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி, நடுத்தெருவில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கால்நடைகளைக் கூட காப்பாற்ற முடியாத சூழல், குடிநீர் உட்பட வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தத்தளிக்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீழ்க்கண்ட நீர் மேலாண்மைத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நடப்பு நிதி ஆண்டிலேயே நிறைவேற்றித்தர வேண்டும்.

 

CHIEF MINISTER FORMER DMK MINISTER MEET

 

ஈச்சம்பாடி அணையிலிருந்து நீரேற்றும் திட்டத்தின் மூலம் 66 ஏரிகளுக்கு நீர் பாசன வசதிகளை  செய்து தரவேண்டும். அதேபோல வாணியாறு அணை இடதுபுறக் கால்வாயை இராமியம்பட்டி  கோபிசெட்டிபாளையம் மற்றும் மூக்கனூர்  வரை நீட்டிப்புச் செய்து அப்பகுதியில் உள்ள 18 ஏரிகளுக்கு நீர் வழங்கிட வேண்டும்.

வாணியாறு வலதுபுறக் கால்வாயை புதுப்பட்டி வரை நீட்டிப்பு செய்திடவேண்டும். ஏ.பள்ளிப்பட்டியில் அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான பெரும்பள்ளம் அணை கட்டுத் திட்டத்தினை நிறைவேற்றிட வேண்டும். அரூர் குமாரம்பட்டி அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குமரன் அணைக்கட்டு மற்றும் கால்வாய்களை சீர் செய்திட அரசு அறிவித்த ரூ 4.5 கோடி நிதிஒதுக்கீட்டிற்கான அரசாணையை உடனடியாக வெளியிட்டு போர்க்கால அடிப்படையில் பணிகளை தொடங்கி நிறைவேற்றித்தர வேண்டும்.

அரூர் அருகே வரட்டாற்றின் குறுக்கே எல்லப்புடையாம்பட்டி பகுதியில் மூன்று தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்' வாடமங்கலம் ஏரியில் இருந்து இருமத்தூர் ஏரிக்கு தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு நீர் மேலாண்மைத் திட்டங்களை நடப்பு நிதி ஆண்டிலேயே நிறைவேற்றி தர வேண்டும்.

தருமபுரி மாவட்டத்து மக்களையும், விவசாயிகளையும் வறட்சியிலிருந்து நிரந்தரமாக காப்பாற்றிட ஒகேனக்கல் காவேரி உபரி நீரை நீரேற்றும் திட்டத்தின் மூலம் அனைத்து ஏரிகளுக்கும் வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் கேட்டுக்கொண்டு, விரிவான மனுவினையும் அளித்தேன் என்றார் முல்லை வேந்தன்.

 

 

 

சார்ந்த செய்திகள்