Skip to main content

புறநகர் ரயில் சேவை - மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

chennai local trains service union railway minister cm palanisamy

 

சென்னையில் புறநகர் ரயில் சேவையைத் தொடங்க அனுமதிக்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில், புறநகர் ரயில் சேவை பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதோடு, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவும். புறநகர் ரயில் சேவையைத் தொடங்கக் கோரி செப்டம்பர் 2- ஆம் தேதியே தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ரயில்கள் இயங்க உறுதிச் செய்யப்படும். புறநகர் ரயில் சேவையைத் தொடங்குமாறு, தெற்கு ரயில்வே-க்கு உத்தரவிட கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்