Skip to main content

ரூபாய் 1.14 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

 

சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் கவுகாத்தியில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.14 கோடி மதிப்பிலான 2.32 கிலோ தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மொகபத் கான் என்பவரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சென்னை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கத்தைக் கடத்தி வருவது அதிகரித்துள்ளதால், சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையங்களில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்