Skip to main content

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே தீர்வு: ரஜினிகாந்த்

Published on 29/03/2018 | Edited on 29/03/2018


காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அவர்,

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்றும் காவிரி மேலாண்மை விவகாரத்தில் நீதி கிடைக்கும் என உண்மையாக நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற கெடு முடியும் நிலையில், இதுவரை காவிரி விவகாரம் குறித்து வாய்திறக்காமல் இருந்த ரஜினிகாந்த் கடைசி நாளான இன்று காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்