Skip to main content

கைதிகளுடன் தொலைப்பேசியில் பேச அனுமதி கோரிய வழக்கு... அரசு மற்றும் சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு!!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

Case seeking permission to speak on the phone with prisoners; Government and Prisons Department ordered to respond

 

சிறைக் கைதிகளுடன் தொலைப்பேசி அல்லது காணொளி காட்சி மூலம் வழக்கறிஞர்கள் பேச அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகளிடம் தொலைப்பேசி அல்லது காணொளி மூலம் வழக்கறிஞர்கள் பேச அனுமதிக்க கோரி கே.ஆர். ராஜா என்பவர்  வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, இதேபோன்று சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் வைத்த கோரிக்கையைப் பரிசீலிக்க உத்தரவிட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டதுடன், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஜுலை 1ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்