Skip to main content

போகிற போக்கில் பேசுபவர்களுக்கெல்லாம் பதில்கூறமுடியாது; டி.டி.வியை தாக்கிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!!

Published on 14/11/2018 | Edited on 14/11/2018


" ஏரி, குளங்கள் தூர்வாரபடாமல் விட்டதால் புயலினால் தமிழகம் பாதிக்கப்படும்" என்ற டிடிவி.தினகரன் கூறிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் போகிற போக்கில் பேசுபவர்களுக்கெல்லாம் பதில் கூறவேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.

 

கஜா புயல்  நாகை மாவட்டத்தில் வீசும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்த்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் இன்று நடைபெற்றது.

 

os.maniyan

 

கூட்டத்தில் புயல் பாதிப்புகளில் மக்களை பாதுகாக்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் கேட்டறிந்தார். மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் விடுப்பு எடுக்காமல் அனைத்து அரசு அதிகாரிகள் பணி திரும்பவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன்" கஜா புயலை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது, நாகை மாவட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் பகுதிகளை கண்டறிந்து அங்கு சிறப்பு கவனம் செலுத்தி அங்கு இருக்கக்கூடிய பொதுமக்களை முகாம்களுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம். மேலும், ஏரி, குளங்கள் தூர்வார படாத காரணத்தால் தமிழகத்தில் புயல் பாதிப்பு ஏற்படும் என்று டி.டி.வி.தினகரனின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு போகிற போக்கில் பேசுபவர்களுக்கு எல்லாம் பதில்கூற முடியாது, கூறவேண்டிய அவசியமில்லை. "என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்