Skip to main content

வானதி சீனிவாசனுக்கு பா.ஜ.கவில் தேசிய அளவில் முக்கிய பொறுப்பு! 

Published on 28/10/2020 | Edited on 28/10/2020
bjp vanathi seenivasan

 

 

பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவராக நியமனம் செய்யப்படுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 

பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறாத நிலையில் முதலாவதாக வானதி சீனிவாசன் அழைக்கப்பட்டுள்ளார். அண்மையில் பா.ஜ.கவின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறாமல் இருந்த நிலையில், ஏற்கனவே இடம் பெற்றிருந்த எச்.ராஜா ஆகியோருக்கும் இடமளிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவராக தமிழகத்தின் வானதி சீனிவாசனை நியமித்து பா.ஜ.க மூத்த தலைவர் ஜேபி நட்டா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்