Skip to main content

ஆன்மிக அரசியலுக்கு வித்திட்டதே பாஜக தான்: தமிழிசை

Published on 13/02/2018 | Edited on 13/02/2018
tamilisai


ஆன்மிக அரசியலுக்கு வித்திட்டதே பாஜக தான் என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று இரவு நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது,

நாத்திக ஆட்சியை அகற்றி ஆத்திக ஆட்சியை கொண்டு வருவதே பாஜகவின் நோக்கம் என்றும், ஆன்மிக அரசியலுக்கு வித்திட்டதே பாஜக தான். தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண், அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ்.

பிரதமர் மோடி குறித்து குறை சொல்லும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பதவியில் இருந்தபோது தமிழகத்திற்காக என்ன செய்து விட்டார்? கட்சிக்கே தலைவராக முடியாத மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு எப்படி முதல்வராவார்? இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Published on 08/07/2019 | Edited on 08/07/2019


தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆரத்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாக மனுவில் தமிழிசை குற்றச்சாட்டு. 

 

 Case filed against Tamil Nadu High Court tamilnadu bjp leaders tamilisai soundararajan

 

 

 

 

Next Story

முடிந்தால் ராஜினாமா செய்யுங்கள் பார்ப்போம்: தமிழிசை சவுந்தரராஜன்

Published on 26/03/2018 | Edited on 26/03/2018

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திருச்சி விமானநிலையத்தில் செய்தியர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 

திமுக மாநாடு என்ற பெயரில் பா.ஜ.க எதிர்ப்பு மாநாட்டை நடத்தியுள்ளதால் திமுகவின் பிரதான எதிர்கட்சி பா.ஜ.கதான். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் கால அவகாசம் உள்ளது. அதுவரை அனைவரும் பொறுத்திருக்க வேண்டும். அதை விடுத்து அதிமுக மற்றும் திமுக எம்.பிக்கள் பதவியை ராஜினாமா செய்வோம் என பயமுறுத்திக்கொண்டிருக்க கூடாது. முடிந்தால் ராஜினாமா செய்யுங்கள் பார்ப்போம் என சவால் விடுத்துள்ளார்.
 

tamilisai

 

மேலும் பேசிய அவர், காவிரியில் மேலாண்மை அமைப்பதில் அதிமுக, திமுகவை விட பா.ஜ.கவிற்குதான் அக்கறை அதிகமுள்ளது எனவும் கூறினார்.