Skip to main content

பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Bharat Ratna Award to Former Bihar Chief Minister Karpuri Tagore

பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனையை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது.

இந்நிலையில் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும், பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூருக்கு நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அரசு பணி, கல்வியில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்திற்கு இட ஒதுக்கீடு கோரி செயல்பட்டவர் ஆவார். பீகார் முதல்வராக இவர் இருந்தபோது பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வியில் 12% இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர்.  இதற்கான அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்