Skip to main content

கடலில் மிதந்த 700 கிலோ பீடி இலைகள்... கோட்டை விடும் உளவுத்துறை...!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி விழித்து கண்காணிக்கின்றோம் என தமிழக உளவுத்துறை போலீசார் சுயதம்பட்டம் அடித்துக்கொண்டாலும், இங்கிருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பொருட்களை அவர்களால் முழுமையாக தடுக்க இயலவில்லை.

 

beedi leaf - Intelligence - srilanka

 



இலங்கையில் நடைப்பெற்று வந்த உள்நாட்டு யுத்தத்திற்கு பிறகு, தமிழகத்திலிருந்து கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டைகள், பீடி இலைகளை இலங்கைக்கு கடத்துவதை வாடிக்கையாக செயல்படுகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இக்கடத்தலை தடுக்க மத்திய மாநில உளவு பிரிவு கடலோர காவல்படை, கடற்படையினர், மரைன் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பினும் கடத்தலை முழுமையாக தடுக்க முடியவில்லை. இதற்குக் காரணம் உளவுப்போலீசாரும், கடத்தல்காரர்களுக்குமிடையேயான ரகசிய ஒப்பந்தமே என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

இது இப்படியிருக்க, கடந்த 8ம் தேதியன்று கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் சில முட்டைகள் மிதந்து வருவதாக கிடைத்த ரகிசியத் தகவலின் அடிப்படையில், இந்திய இலங்கை சர்வதேச கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐ.சி.ஜி.எஸ் ராணி அவந்திபாய், கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேசன் தொடர்புகொண்டு மிதந்துக் கொண்டிருக்கும் மூட்டைகளை பறிமுதல் செய்ய சொல்லி உத்தரவிட, கச்சத் தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட பகுதியில் மிதந்துச்சென்ற சென்ற 11 மூட்டைகளை பறிமுதல் செய்து மண்டபம் கடலோரக் காவல் படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ்.சி. 432 கப்பலில் ஒப்படைத்தனர் கடலோர காவல்படையினர். கைப்பற்றிய மூட்டைகளை பிரித்து சோதனை செய்கையில் அதில் 700 கிலோ பீடி இலைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

 



கடலோரக் காவல் படையினரோ,  "ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடத்தல்காரர்கள் மூட்டை மூட்டையாக பிடி இலைகளை இலங்கைக்கு கடத்திச் சென்றபோது. இந்திய கடற்படை வருவதை அறிந்து கச்சத்தீவு அருகே நடுக்கடலில் பீடி இலைகளை  தூக்கி எறிந்து விட்டு சென்று தப்பித்திருக்கலாம் எனவும், மீதமுள்ள மூட்டைகளை ஹோவர் கிராப்ட் கப்பல்கள் மூலமாகவும் ராமேஸ்வரம் தனுஷ்கோடி ஒலைகுடா, வடகாடு போன்ற கடல் பகுதிகளில் ஏதேனும் மூட்டைகள் கரை ஒதுங்கி உள்ளதா.?" எனவும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், இக்கடத்தல்கள் முழுக்க, முழுக்க உளவுத்துறையினரின் அஜாக்கிரதையாலும், அவர்களுடன் உள்ள ரகசிய டீலிங்காலுமே தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன என்கின்ற தகவலும் இடம் பெறாமல் இல்லை.

 

சார்ந்த செய்திகள்