Skip to main content

சூறைக் காற்றில் சிக்கி விசைப்படகு கடலில் மூழ்கியது! 

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
The barge got caught in the storm and sank in the sea!

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினத்தில், ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவரின் விசைப்படகு சூறைக் காற்றில் சிக்கி கடலில் மூழ்கியது. இது குறித்தான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குமரி மாவட்டம் சின்னத்துறை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் இரு விசைப்படகுகளில் சுமார் 20 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக கடந்த மாதம் தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சென்றன. இரு படகுகளும் ஆழ்கடலில் அருகருகே இருந்தன. அப்போது திடீரென வீசிய சூறைக் காற்றால் ஒரு படகில் கடல் நீர் உட்புகுந்தது. பிறகு பின்பக்கம் கடல் நீர் அதிகளவில் உட்புகுந்து அப்படியே படகு கடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க துவங்கி பிறகு முழுவதுமாக அந்த படகு மூழ்கியது. 

இதனைக் கண்ட அப்படகில் இருந்த மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து தங்கள் உயிர்களை காத்துக்கொண்டனர். பிறகு அருகில் இருந்த அவர்களின் மற்றொரு படகில் ஏறி கரைக்கு திரும்பினர். இந்தக் காட்சிகள் மற்றொரு படகில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுக்க தற்பொது அது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்