Skip to main content

ஏர்செல் வாடிக்கையாளர்கள் சிரமத்தில் இருந்து தப்பிக்க இதனை முயற்சி செய்து பாருங்கள்!

Published on 22/02/2018 | Edited on 22/02/2018

தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவன நெட்வொர்க் சேவை பெரும்பாலும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல்களில் இன்கம்மிங், அவுட் கோயிங் வசதியும் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

பல மாவட்டங்களில் பொது மக்கள் ஏர்செல் வாடிக்கையாளர்கள் அலுவலத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொது மக்களின் கேள்விகளை சமாளிக்க முடியாத உள்ளூர் ஏர்செல் நிறுவன அலுவலகங்கள் இன்று மூடப்பட்டு காணப்படுகிறது. பல வருடங்களாக ஏர்செல் நம்பரை பயன்படுத்தி வருவதால் ஏர்செல் நம்பரையே ஆதார், வங்கி, கேஸ் போன்ற பல சேவைகளுக்கு கொடுத்து உள்ளதால் மக்கள் செய்வது அறியாது திகைத்து நிற்கின்றனர்.

இந்நிலையில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் எண்ணில் இருந்து ஒரேயொரு எஸ்எம்எஸ் அனுப்பி வேறு நிறுவன மொபைல் சேவைக்கு, அதே எண்ணை மாற்றி கொள்ளலாம். அதன்படி ஏர்செல் வாடிக்கையாளர்கள், தங்களது மொபைல் செட்டிங்கில், நெட்வொர்க் செட்டிங் சென்று (Manually) நெட்வொர்க் சர்ச் செய்ய வேண்டும். அதில் காண்பிக்கப்படும் நெட்வொர்க்கில் ஏர்டெல் 2ஜியை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர், PORT என டைப் செய்து, அத்துடன் உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். இதனால் மொபைல் போர்ட்டபிளிட்டி எண் உங்களுக்கு 24 மணி நேரத்தில் கிடைக்கும். அந்த எண் மூலம், நீங்கள் ஏர்டெல் மொபைல் சேவைக்கு எளிதில் மாறலாம். உங்கள் மொபைல் எண்ணும் மாறாது. அதே எண்ணில் ஏர்டெல் சேவையை பயண்படுத்தலாம்.

ஆனால், இந்த சேவையிலும் பல குறைபாடுகள் நிலவுகிறது. எஸ்எம்எஸ் செல்வதில்லை. மொபைல் போர்ட்டபிளிட்டி எண் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. எனினும் முயற்சி செய்து பாருங்கள்..

சார்ந்த செய்திகள்

Next Story

தொழிலதிபர் சிவசங்கரன் சொத்துகள் முடக்கம்

Published on 01/02/2019 | Edited on 01/02/2019
s

 

ஐடிபி வங்கியில் 470 கோடி கடன் பெற்று  அதனை திருப்பிச்செலுத்தாமல் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏர்செல் முன்னாள் நிறுவனர், தொழிலதிபர் சிவசங்கரன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.    இதைத்தொடர்ந்து சிவசங்கரன் மீது அமலாக்க இயக்குநரகமும் வழக்கு பதிவு செய்தது.   சிவசங்கரன் நிறுவனங்கள் மேலும் 523 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாகவும் சிபிஐயில் வழக்கு உள்ளது.


இந்நிலையில், பணமோசடி புகாரில் தொழிலதிபர் சிவசங்கரனின் 224.6 கோடி சொத்துக்களை  முடக்கியதாக அமலாக்கத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.   சென்னையில் எம்.ஆர்.சி.நகர், தி.நகரில் உள்ள சிவசங்கரன் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.  முடக்கப்பட்ட சொத்துக்கள் சிவசங்கரனின் சிவா குழும நிறுவனங்களுக்கு சொந்தமானவை. ஆக்செல் சன்ஷைன் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

 

சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் சிவசங்கரன் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு கூறியுள்ளது.


 

Next Story

வாடிக்கையாளர் வழக்கு: பதில் அளிக்க ஏர்செல், மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

 

சென்னையை சேர்ந்த  சரவணகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் 9 ஆயிரம் டவர்கள் அமைக்கப்பட்டு 25 லட்சம் பேர் ஏர்செல் தொலை தொடர்பு இணைப்பை பயன்படுத்தி வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 6500 டவர்கள் வாடகைபாக்கி காரணமாக  செயல்படவில்லை என ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை ஆதிகாரி சங்கர நாராயணன் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
 

மேலும் பிப்ரவரி 22 முதல் ஏர்செல் இணைப்பில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக, ஏர்செல் இணைப்பை பயன்படுத்த முடியாமல் லட்சக்கணக்காண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  90% வாடிக்கையாளர்களால் ஏர்செல் இணைப்பை பயன்படுத்த முடியவில்லை என்பதால் மத்திய அரசும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் ஏர்செல் நிறுவனம் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எம்.என்.ப்பி. மூலம் வாடிக்கையாளர்கள் மாறும் வரையிலோ அல்லது முழுமையாகவோ வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
 

ஏர்செல் நிறுவனத்தில் ஆதார், மானிய சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இணைக்கப்பட்டுள்ளதால்,  திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் அளவில்லாத சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதால் டிராய் தலையிட்டு ஏர்செல் நிறுவனத்தின் மீது நடடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கோரியிருக்கிறார்.
 

இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து மத்திய தொலைதொடர்பு துறை, டிராய் மற்றும் ஏர்செல் நிறுவனம் ஆகியவை ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
 

சி.ஜீவா பாரதி