Skip to main content

நின்றகோலத்தில் அத்திவரதர்...!

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 31 நாட்களாக சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதரை இன்று முதல் நின்ற கோலத்தில் மக்கள் தரிசித்து வருகின்றனர்.

   

athivarathar in standing position...!

 

நேற்றுவரை அத்திவரதரை சயனகோலத்தில் மக்கள் தரிசித்து வந்த நிலையில் இன்று அத்திவரதரை நின்ற கோலத்திற்கு ஆகம விதிப்படி மாற்றியமைக்க நேற்று மதியமே காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் கிழக்கு கோபுர நடை மூடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5.25 மணிமுதல் அத்திவரதரை நின்ற கோலத்தில் மக்கள் தரிசித்து வருகின்றனர். வழக்கம்போல் கூட்டம் அலைமோதுகிறது. 

கடந்த 31 நாட்கள் சயன கோலத்தில் தரிசனம் தந்த அத்திவரதர் ஆகஸ்ட் ஒன்று முதல் 17 ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சிதர இருக்கிறார். சயன கோலத்தில் இதுவரை அத்திவரதரை 47 லட்சம் பேர் தரிசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்