Skip to main content

அடுத்தவர் ஆயுளை கணித்த ஜோதிடர் தற்கொலை

Published on 05/05/2019 | Edited on 05/05/2019

"இந்த ஜாதக ராசிப்படி செல்வ செழிப்பு குடும்பத்தில் பெருகும்.. இரண்டு ஜாதக பொருத்தத்தின் படி திருமண பொருத்தம் சூப்பர் ஜோடி தான்" இப்படித்தான் ஜோதிடர் அருணாச்சலம் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வரும் வாடிக்கையாளர்களிடம் அசத்தலாக பேசுவார். அவரிடம் ஜோதிடம் பார்க்க ஈரோட்டில் கூட்டம் குறைவில்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட ஜோதிடர் அருணாச்சலம் திடீரென வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கடன் சுமையை தீர்க்க வழி சொல்லுங்கள் என ஏராளமான பேர் அவர்களின் ஜோதிடத்தை கொடுத்து கேட்டபோது உங்களுக்கான கஷ்டம் இன்னும் ஓரிரு மாதம் தான் அதன் பிறகு மற்றவர்களுக்கு கடன் நீங்கள் கொடுப்பீர்கள் என கூறிய ஜோதிடர் அருணாச்சலம் அவருக்கு ஏற்பட்ட கடன் சுமையால் தான் தற்கொலை செய்துள்ளார் என்பது பரிதாபம்.

 

erode

 

ஈரோடு அகில் மேடு முதல் வீதியைச் சேர்ந்தவர் அருணாச்சலத்திற்கு வயது 67.  அருணாச்சலம் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள்  பணத்தை திருப்பி கேட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் சில காலமாக தவித்து வந்துள்ளார். மன வேதனையில் இருந்து மீள முடியாமல்  தற்கொலை செய்துள்ளார். இவரிடம் ஜாதகம் பார்க்க வந்தவாடிக்கையாளர் ஒருவர் "பாருங்க கொடுமையை... திருமணம், குழந்தை பாக்கியம், கடன் சுமையால் குடும்ப கஷ்டம், குறிப்பாக எவ்வளவு காலம் ஆயுள் உள்ளது என்பதையெல்லாம் இவர் சொல்வது அப்படியே நடக்கும் என நம்பிக்கையுடன் தான் இவரிடம் ஜாதகம் பார்ப்போம், எங்களுக்கு ஆயுள் ரேகையை பார்த்து 80 வயது, 90 வயது கெட்டி என்று கூறியவருக்கு அவரின் ஆயுள் என்ன என்பது தெரியாமல் போய் விட்டதே..." என்றனர். 

 

 

ஜோதிடம்,ஜாதகம், ராசி பலன் எல்லாம் அவரவர் நம்பிக்கை சார்ந்ததுதான் என்பதை ஜோதிடர் அருணாச்சலம் தனது இறப்பின் மூலம் உணர்தியுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்