Skip to main content

"மீரா மிதுனை உடனே கைது செய்க" - வழக்கறிஞர்கள் போராட்டம்!

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

'Arrest Meera Mithun immediately ...' - Lawyers protest!

 

 

பட்டியலின் சமூகத்தினரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் இழிவாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையில் நேற்று முன்தினம் (07/08/2021) புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், "நடிகை மீராமிதுன் ட்விட்டரில் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் இழிவாகப் பேசி காணொளிப் பதிவைப் பதிவிட்டுள்ளார்" எனப் புகார் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவர் பேசியதாகக் கூறப்படும் வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது.

 

அந்த புகாரின் அடிப்படையில் நடிகை மீராமிதுன் மீது கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மீரா மிதுனை உடனடியாக கைது செய்யக்கோரி சென்னை அம்பத்தூரில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோ தலைமையில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 

சார்ந்த செய்திகள்