Skip to main content

எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

 Anti-bribery police probe MR Vijayabaskar!

 

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், கரூரில் 20 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பணம் ரூபாய் 25,56,000/- மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இரண்டுமுறை இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இன்று (25.10.2021) அவர் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னிலையில் ஆஜரானார். தற்போது எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்