Skip to main content

ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா! புறக்கணித்த திமுக அமைச்சர்கள்! 

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

Annamalai University Graduation Ceremony attended by the Governor! Ignored DMK ministers!

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 84வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 


இந்த நிலையில் கவர்னர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். அதேபோல் திமுகவைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர், பேரூர் மன்றத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள யாரும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. நீட் தேர்வு பிரச்சனையில் தமிழக மாணவர்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

 


 

சார்ந்த செய்திகள்