Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கலந்தாய்வில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு?

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
anna


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேளாண் படிப்புகளுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.

 

அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளம் அறிவியல், தோட்டக்கலை  படிப்புகளுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. இதில் மாற்றுதிறனாளி ஒதுக்கீட்டில் மாணவர்கள் 39 பேரில் 13 பேர் கலந்துகொண்டனர் இதில் தகுதியான 7 பேருக்கு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.

 

பொது இடங்களுக்கு 634 மாணவர்கள் அழைக்கப்பட்டனர் தகுதியான 181 பேருக்கு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது. இதில் அரியலூர் மாவட்டம் டி.பழுர் கிராமத்தை சேர்ந்த தமிழரசன் 194 கட்ஆப் மதிப்பெண் பெற்று முதல் இடத்திலும், தருமபுரி மாவட்டம் சத்யா 193 எடுத்து இரண்டாம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த சிலம்பரசன் 193 எடுத்து மூன்றாம் இடத்தையும் பெற்றனர். தகுயுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், சிதம்பரம்தொகுதி எம்எல்ஏ பாண்டியன்,வேளாண்புல முதல்வர் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் சேர்கைக்கான கடிதத்தை வழங்கினார்கள். கலந்தாய்வு தொடர்ந்து வரும் 27-ந்தேதி வரை நடைபெறும். இதில் வேளாண் இளம்அறிவியல்,தோட்டக்கலை படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீடு மற்றும் சுயநிதி பிரிவில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு சேர்கை கடிதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கலந்தாய்வு குறித்து பல்கலைக்கழக இணையதளம் மற்றும் 04144-238349 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

 

கலந்தாய்வில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சை.

சிறப்பு விருந்தினர்கள் மேடையில் மதியம் 12.120 மணிக்கு அமர்ந்தவுடன் கலந்தாய்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சேர்க்கை அட்டை வழங்கும் நிகழ்ச்சி தமிழ்தாய் வாழ்த்து பாடாமல் தொடங்கியது. இந்த செயல்  அரங்கில் அமர்ந்திருந்த மாணவர்கள்,மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து துணைவேந்தர் முருகேசனிடம் கேட்டபோது காலையிலே மாணவர்கள் அமர்ந்து இருந்த போதே பாடிவிட்டார்கள் என்று சமாளித்து விட்டார். ஆனால் கலந்தாய்வில் காலையில் இருந்து அரங்கில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் தமிழ்தாய் வாழ்த்துபாடவில்லை. தகுதிபெற்ற மாணவர்களை வரிசைபடுத்தி அமரவைத்தார்களே தவிர தமிழ்தாய் வாழ்த்து படலை படவில்லை என்றார்கள்.

 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக வை சேர்ந்த தொகுதி எம்எல்ஏ கட்சி நிகழ்ச்சி போல் கட்சியினர் பெயர் 52 பேரின் பெயரை படித்தார். பின்னர் அதிமுகவின் மகளிர் அணியின் மாவட்ட செயலாளராக உள்ள செல்வி ராமஜெயம் மேடையில் அமர்ந்து கொண்டு மாணவர்களுக்கு சேர்கை கடிதத்தை வழங்கினார். இதுவும் அனைவரிடத்திலும் சர்சையை ஏற்படுத்தியது. தமிழ்தாய் வாழ்த்தை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது தான் பட வேண்டும் முன்னாடியே பாடி விட்டேன் என்று கூறுவது தமிழையே அவமதிக்கும் செயல் என்று சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதேபோல் அரசு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை கட்சி நிகழ்ச்சியாக  நடத்தகூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.  

சார்ந்த செய்திகள்