Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழக பணி நிரவல் ஊழியர்கள் உண்ணாவிரதம்

Published on 20/07/2019 | Edited on 20/07/2019


கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேரூந்து நிலையம் அருகே காந்தி சிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போராட்டத்திற்கு பணி நிரவல் ஊழியர்களின் பிரதிநிதிகள் குமரவேல், யாதவ சிங், பன்னீர்செல்வம், வேல்ராஜ், ஏ. பன்னீர்செல்வம், முருகன் உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர்.  காலை முதல் மாலை வரை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மிகை ஊழியர்களாக கருதி 2500 க்கும் மேற்பட்டவர்களை தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு பணிநிரவல் செய்துள்ளனர்.

 

a

 

ஊழியர்களை தொலைதூர பணியிடங்களுக்கு பணி நிரவல் செய்ததால் மன உளைச்சலில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இறந்து போகும் சூழலில் உள்ள ஊழியர்களை  பாதுகாக்க வேண்டும்.  மன உளச்சலின் காரணத்தால் இதுவரை 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இறந்துள்ளனர். இவர்களின் குடும்பத்திற்கு வேலையும் நிவாரணமும் வழங்க வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஊழியர்களை மிகை ஊழியராக கணக்கெடுப்பு செய்ததில் பல்வேறு குளறுபடிகளும் முறைகளும் நடந்துள்ளது அதை சரி செய்து திரும்ப பெற வேண்டும்.

 

 பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழுவின் தீர்மானத்தின்படி பணிநிரவல் மேற்கொள்ளப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டவர்களை எக்காரணம் கொண்டும் நீட்டிக்கக் கூடாது. பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள முறைகேடுகளுக்கும் ஏற்பட்ட நிதி சிக்கலுக்கும் நீதி அரசர் மூலம் நீதி விசாரணை நடத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதுகுறித்து சரியான முடிவை பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக அரசும் எடுக்கவில்லை என்றால் அனைத்து ஊழியர்களையும் ஒருங்கிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று போராட்டத்தில் அறிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்