Skip to main content

அண்ணா பல்கலைக்கழக  நியமன மோசடிகள்! சிக்குகிறார்கள் 135 பேராசிரியர்கள்!

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

பல்கலைக்கழக விதிகளுக்குப் புறம்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட 135 பேராசிரியர்களின் நியமனங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.  ரத்து செய்யப்பட்டுள்ள இந்த விவகாரம் பல்கலைக்கழக வட்டாரங்களில் பல அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

 

Anna University nomination! 135 Professors!


கடந்த 2007-ஆம் ஆண்டு நெல்லை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை தலைமையிடமாகக் கொண்டு அண்ணா  பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட மாவட்டங்களில் இயங்கி வந்த அண்ணா பல்கலைக்கழகங்களை  கடந்த 2012-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போது மீண்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றாக  இணைக்கப்பட்டன. அப்படி இணைக்கும் போது  பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நியமனங்களும் நடந்தன. ஆனால், அந்த நியமனங்கள்  முறையாகவும், விதிகளின்படியும் நடைபெறவில்லை என பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் புகார்கள்  எழுந்தன. அந்த குற்றச்சாட்டுகள் மூலம் பல்வேறு ஊழல் விவகாரங்களும் அம்பலமானது.  உடனே அந்த நியமனங்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஐ.ஏ.எஸ் அதிகாரி  ஆனந்தகுமார் தலைமையில்  5 பேர்  கொண்ட குழு அமைக்கப்பட்டது. கடந்த  2017,  ஜூலையில் அமைக்கப்பட்ட அக்குழுவின் உயரதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டது. 

 

Anna University nomination! 135 Professors!


அந்த குழு நடத்திய விசாரணையில், பல்கலைக்கழக இணைப்பின் போது (2012)  நடைபெற்ற 135 பேராசியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் நியமனங்களில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதையும் முறைகேடுகள் நடந்திருப்பதையும்  கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து,  அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் 16 உறுப்பு பொறியியல்  கல்லூரிகளில் தற்போது  பணிபுரிந்து வரும் அந்த பேராசிரியர்களின் பட்டியலையும் தயாரித்தது அக்குழு. 

மேலும், இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட அக்குழுவின் அறிக்கையில், தகுதியில்லாத பேராசிரியர்கள் நியமனம், இட ஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை, பணியிடங்களில் கூடுதலாக ஆட்கள் சேர்ப்பு, நியமனங்களில் விதிமுறை மீறல்கள்  உள்ளிடவைகள் 135 நபர்களின் நியமனத்தில் நடந்துள்ளதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், தவறு செய்துள்ள  135 பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கைப் பாயும் என பல்கலைக்கழக வட்டாரத்தில் தகவல்கள் பரவியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்