Skip to main content

அண்ணா பல்கலை., கல்லூரி பேராசிரியர் தற்கொலை!

Published on 07/06/2020 | Edited on 08/06/2020

 

Anna University College Professor Incident


திருவாரூரில் தனியார் தங்கும் விடுதியில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி பேராசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 


தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பேராசிரியர் கோபிகிருஷ்ணன் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக விடுதியின் உரிமையாளர் அளித்த தகவலையடுத்து போலீசார் பேராசிரியரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பொறியியல் படிப்பு; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Engineering Studies; Today is the last day to apply

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

கடந்த ஜூன் 6 ஆம் தேதியுடன் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. அதே சமயம் விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மூலம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் வெளியிட்டிருந்த அறிவிப்பில்,'பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6 தேதி (06.05.2024) முதல் கடந்த 6 ஆம் தேதி (06.06.2024) வரை நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அதில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். தற்பொழுது மாணாக்கர்களின் கோரிக்கைகளை ஏற்றுத் தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை (10.06.2024) மற்றும் நாளை மறுநாள் (11.06.2024) என இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்படுகிறது.

இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் புதிதாக விண்ணப்பத்தினை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாகப் பதிவு செய்து, பதிவு கட்டணம் செலுத்தி தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்' எனத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகும். இதுவரை தமிழக முழுவதும் 2.50 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.