Skip to main content

செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ; மருத்துவமனை விரையும் முதல்வர்

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

nn

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இன்று காலை முதலே அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, கே.என். நேரு. உதயநிதி, ரகுபதி என பல்வேறு துறை அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்தித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துக்களைத் தெரிவித்துவிட்டுச் சென்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் சீனியர் அமைச்சர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் சட்ட ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், தற்பொழுது ஓமந்தூரார் மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியின் உடல்நலன் குறித்து விசாரிக்க முதல்வர் புறப்பட்டுள்ளார். நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்