Skip to main content

மருத்துவக்கல்லூரிக்கு ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கிய முன்னாள் மாணவர்கள்!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

Alumni donate oxygen concentrators to medical college!

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சார்பில் ராஜா முத்தையா அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ 4 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டி மற்றும் மருத்துவ பொருட்களை முன்னாள் பொறியியல் கல்லூரி மாணவரும், தொழிலதிபருமான ஷாஜஹான் சேட் துணைவேந்தர் முருகேசனிடம்  வழங்கினார். 

 

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன், சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மிஸ்ரா, முன்னாள் மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சரவணன், பல்கலைக்கழக கட்டிட கட்டுமான பணி ஒருங்கிணைப்பாளர் அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்