Skip to main content

முதல்வரின் அழைப்பை ஏற்றுச் சென்ற அதிமுக எம்.எல்.ஏ!

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

AIADMK MLA Ayyappan inaugurated cm stalin breakfast scheme

 

காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில், நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து உணவு அருந்தினார். மேலும் இத்திட்டத்தை தங்கள் பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தொடங்கி வைக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

 

அந்த வகையில், அதிமுக எம்.எல்.ஏ அய்யப்பன் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மதுரை உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ, சீமானுத்து அரசு தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். கட்சியில் இருந்து யாரும் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கக் கூடாது என அதிமுக தலைமை, தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ அய்யப்பன் கலந்துகொண்டது கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே எம்.எல்.ஏ அய்யப்பன் ஓபிஎஸ் ஆதரவாளர் என்று  தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுக-தேமுதிக கூட்டணி முறிவா?;பாஜகவை நெருங்கும் பிரேமலதா

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Will the AIADMK-DMK alliance break up?-Premalata approaching the BJP

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கலில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. அதன் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.

அதேநேரம் திமுக தலைமையிலான தனது கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலிலும் அப்படியே அரவணைத்துக் கொண்டு சென்றார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அவரின் சாதுர்யமான அரசியலால் திமுக கூட்டணியில் எந்த முரண்பாடும் வரவில்லை. முக்கியமான முடிவுகள் அனைத்தையும் கூட்டணியினரோடு கலந்தாலோசித்து எடுத்து வருகிறார் ஸ்டாலின். இதனால் திமுக கூட்டணி உறுதியாக இருந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை அறிவித்து பரப்புரை பணிகளை தொடங்கியுள்ளது.

அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலில் உருவான பாஜக-பாமக கூட்டணி, இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. இதற்காக இரு கட்சிகளும் கலந்துபேசி பாமக போட்டியிடும் என்றும், பாமகவின் வெற்றிக்கு பாஜக உதவும் என்றும் அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் உருவான அதிமுக-தேமுதிக கூட்டணி,தேர்தலுக்குப் பிறகு முறிந்து விட்டது என்கிறார்கள்.

அதாவது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதில்லை என்றும், தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தனது கூட்டணிக் கட்சியான  தேமுதிகவுடன் கலந்தாலோசிக்காமலே அதிமுகவினரிடம் மட்டும் ஆலோசித்து தன்னிச்சையாக அறிவித்தார் எடப்பாடி. இந்த முடிவு, தேமுதிக பிரேமலதாவை அதிர்ச்சியடைய வைத்தது. அதே சமயம், தனது கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து, 'இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது' என்று தன்னிச்சையாக அறவித்தார் பிரேமலதா.

ஆக, 'அதிமுக-தேமுதிக கூட்டணி உறவு, தேனிலவு முடிந்ததும் முறிந்து விட்டது. மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் மலர்ந்திருப்பதால் பிரேமலதாவின் பார்வை பாஜக பக்கம் திரும்பியுள்ளது. பாஜகவின் மேலிடத் தலைவர்களை சந்திக்க முயற்சித்து வருகிறார் பிரேமலதா' என்கிறார்கள் தேமுதிக மாநில நிர்வாகிகள்.

Next Story

பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
cm stalin who started the excavation work

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டைகளில் சற்றும் சிதிலமடையாத கோட்டை, கொத்தலம், அகலியுடன் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. கோட்டையின் நுழைவாயில்களில் முனீஸ்வரன், காளியம்மன் போன்ற காவல் தெய்வங்கள் கோயில்களாக கட்டி வழிபட்டு வருகின்றனர். 

இந்த கோட்டைக்குள் உள்ள நீர்வாவிக் குளக்கரையில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லில் கி.பி. 2 அல்லது 3 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துகளில் உள்ள கல்வெட்டு ஒன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்லில், கோட்டைத் தலைவன் கணங்குமரன் ஆநிரைபூசலில் இறந்த தகவலை சொல்லும் நடுகல் என்பது தெரிய வந்தது. இதன் பிறகு பல்வேறு ஆய்வாளர்களின் வருகையை தொடர்ந்து கோட்டைப் பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நீதிமன்றம் மூலம் அகழாய்வுக்கான உத்தரவும் பெறப்பட்டது.

cm stalin who started the excavation work

தொடர்ந்து 2021 ம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்தது. அடுத்தகட்டமாக 2022-2023 ம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் தங்கத்துரையை இயக்குனராக கொண்டு அவரது ஆய்வுக் குழுவினர் கடந்த ஆண்டு அகழாய்வு செய்தனர். அகழாய்வில் சங்ககால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், செங்கல், மணிகள், வட்டசில், தங்க ஆபரணம், போன்ற ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வட்ட வடிவில் சுடுசெங்கல் கட்டுமானம் நீர்வழித்தடம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

cm stalin who started the excavation work

இந்த நிலையில் அடுத்தகட்ட அகழாய்விற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செவ்வாய் கிழமை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொளி காட்சி வாயிலாக அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத்திடலில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, மக்கள் பிரநிதிகள், உள்ளாட்சி பிரதிநிகள், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுக் குழுவினர் ஆகியோர்  கலந்து கொண்டனர். இந்த அகழாய்வில் சங்ககால மக்கள் வாழ்ந்த வரலாறுகள் சான்றுகளாக வெளிப்படும் என்ற கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அகழாய்வு செய்யப்பட்ட குழிகள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கிடைத்துள்ள பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

cm stalin who started the excavation work

தற்போது நீர்வாவி குளத்தின் தென்மேற்கு கரைப் பகுதியில் உள்ள மேடான பகுதிகளில் அகழாய்வு செய்ய பணிகள் தொடங்கியுள்ளது. இதே போல மேலும் சில இடங்களையும் ஆய்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அகழாய்வு நடக்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.