Skip to main content

மகனை கதாநாயகனாக்க படம் எடுக்க தயாராகிறாரா அதிமுக அமைச்சர்?

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தை முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுன் கொங்கு ஏரியாக்கள் ரைட்ஸ் வாங்கி படத்தை வெளியிட்டு பெரும் லாபத்தை பார்த்ததாக கூறப்படுகிறது. முதல்வரின் மகன் திரைத்துறையில் இறங்கி தொடர்ச்சியாக பெரிய நடிகர்களின் படங்களை குறித்துவைத்து செயல்படுகிறார் என்கிறார்கள் திரைதுறையில். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் ஜீனியர் அமைச்சராக இருப்பவர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி எம்.எல்.ஏவான அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

 

AIADMK minister son

 



இவரது இளையமகன் விஜய். பி.டெக் பட்டதாரியான இந்த 25 வயது இளைஞர், அரசியல் ஆர்வம்மில்லாமல் படித்துவிட்டு நண்பர்களோடு வலம் வந்துக்கொண்டுயிருந்தார். அப்பா அமைச்சரானதும், அவரது அரசியல் உதவியாளராக மகனே பொறுப்பு ஏற்றுக்கொண்டு அரசு சம்பளம் பெறுகிறார். அமைச்சரின் துறை நடவடிக்கைகள் சில உட்பட, அமைச்சருக்கான வரவு – செலவுகளை அவர் தான் கவனித்து வருகிறார். மகன் படித்தவர் என்பதால் அதிகாரிகள் சொல்வது சரிதானா என மகனிடம் கேட்டு உறுதி செய்துகொண்டே அமைச்சர் பணிகளை செய்கிறார்.

சென்னையின் பிரபல ஹோட்டல்களில் அதிகாரிகள், தொழிலதிபர்களுடனான சந்திப்பு போன்றவற்றை அமைச்சரின் மகன் நடத்துகிறார் எனக்கூறப்படுகிறது. அதோடு, சினிமாத்துறையினர் வாசமும் அந்த ஹோட்டல்களில் வீசுவதோடு, அவர்களின் நட்பும் அமைச்சரின் மகன் விஜய்க்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் சிலர் நீங்க சினிமா நடிகர்கள் போல் அழகாயிருக்கிங்க, படத்தில் நடிச்சா இன்னும் பெரிய அளவுக்கு உயரலாம், மக்களிடம் ஈஸியா ரீச்சாகலாம். பிற்காலத்தில் அரசியலில் உங்களுக்கு அது கை கொடுக்கும் என தூபம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல, அமைச்சரின் மகன் மனதிலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை துளிர்விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 



இதுப்பற்றி நம்மிடம் பேசிய ஆரணி அதிமுகவினர். முதல் முறையா எம்.எல்.ஏவாகி, அமைச்சராகி இப்பத்தான் சம்பாதிச்சி வச்சியிருக்கார். பல வழிகளில் வந்த வருமானத்தை சில வழிகளில் முதலீடு செய்து பாதுகாப்பாயிருக்கார். கட்சியினர் உட்பட யாரையும் பண விஷயத்தில் ஏமாத்தாம இருக்கார். இந்த பேரோடு இருப்பதை விட்டுட்டு மகன் ஆசைப்படறானேன்னு சினிமா படம் எடுக்கறன், மகனை நாயகனாக்கறன்னு இறங்கனார்ன்னா அவ்வளவு தான், அவரோட நிலைமை என்றார்கள். அமைச்சர் மகன் நாயகனாகிறார் என்கிற பேச்சு அமைச்சர் தரப்பில் இருந்தே கிளம்பி மாவட்டத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்