Skip to main content

பன்றிக்காய்ச்சலுக்கு அதிமுக பிரமுகர் பலி - அமைச்சர் தொகுதி அதிர்ச்சி

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
ad

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள அத்திபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி (34). முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரான இவர் அதிமுகவில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் நிர்வாகியாக இருந்தார்.  கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த புகழேந்தி. விராலிமலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.


 ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  அங்கு புகழேந்திக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்ட போது அவருக்கு  பன்றிக்காய்ச்சலுக்காண அறிகுறிகள் இருப்பது தெரிந்துள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் புகழேந்திக்கு காய்ச்சல் குணமாகவில்லை. அப்பல்லோ டாக்டர்கள் புகழேந்தியை அழைத்து சென்று விடுமாறு கூறினர்.

 

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை புகழேந்தி சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அதிகாலை 4 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.  .சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி அடுத்த 10 நிமிடத்தில் உடனடியாக புகழேந்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது.  பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும் ஆய்வு மேற்கொள்வதாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறி வரும் நிலையில் அவரது தொகுதியில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலியான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்