Skip to main content

4 மாத பென்ஷன் தொகையை கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியாக கொடுத்த அதிமுக மா.செ.

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

கரோன நிவாரணநிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வேண்டுகோள் வைத்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.பி.கள், எம்.எல்.ஏ.க்கள் அவரவர் மாவட்ட கலெக்டர்களிடம் நிதி வழங்கி வருகிறார்கள். திருச்சி மாவட்ட எம்.பி. திருநாவுக்கர், திமுக எம்.எல்.ஏ.க்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் நிதி கொடுத்தனர்.

 

AIADMK District Secretary gave fund to  Corona impact

 

 

இந்த நிலையில் திருச்சி மாநகர அதிமுகவின் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.பியுமான குமார் தன்னுடைய 4 மாத பென்ஷன் தொகையான 1,05,000 ரூபாயை, இன்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினார். அப்போது உடன் தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர். 

 

சார்ந்த செய்திகள்