Skip to main content

சென்னையில் ஆப்பிரிக்க யானையின் தந்தம்...!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

African elephant ivory in Chennai ...!

 

சென்னையில் விபத்துக்குள்ளான காரிலிருந்து யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை எழும்பூரில் கார் ஒன்று விபத்தில் சிக்கியது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியிருந்தது. இந்த விபத்தில் சிக்கிய காரை போலீசார் சோதனையிட்டதில் அந்தக் காரில் யானை தந்தங்கள், மான் கொம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைப் பறிமுதல் செய்த போலீசார், விபத்தில் சிக்கிய எழும்பூர் எத்திராஜ் சாலை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வில்சன் என்பவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள உறவினர் ஒருவர் பரிசாக தந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் யானை தந்தங்கள் கார் விபத்திற்குப் பிறகு கைப்பற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்