Skip to main content

ஆத்தூர் அதிமுக வேட்பாளருக்கு கரோனா!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

admk party attur assembly constituency candidate covid test for positive

 

ஆத்தூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெயசங்கரன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஜெயசங்கரன் (வயது 49) போட்டியிட்டார். கடந்த சில நாள்களாக அவர், காய்ச்சல், சளி தொந்தரவால் அவதிப்பட்டு வந்தார். சாதாரண காய்ச்சலாக இருக்கும் எனக்கருதி மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லாமல் இருந்தார்.

 

இந்நிலையில், காய்ச்சல் தாக்கம் மற்றும் உடல் வலி மேலும் அதிகரித்ததால் ஏப். 7- ஆம் தேதி, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

 

இதையடுத்து அவர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


 

 

சார்ந்த செய்திகள்